ஹெலிகப்டர் விபத்தில் கென்யாவின் இராணுவத் தலைவர் பிரான்சிஸ் ஒகோல்லா உட்பட 09 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
எல்ஜியோ-மராக்வேட் பகுதியில் நேற்று (18) இந்த விபத்து சம்பவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மிகவும் வீரம் மிக்க தளபதிகளில் ஒருவரை நாடு இழந்துவிட்டதாக கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ கவலை வெளியிட்டுள்ளார்.
கென்யா பாதுகாப்புப் படைகளின் சகோதரத்துவத்திற்கு இது ஒரு சோகமான தருணம் எனவும் நாட்டின் துரதிஷ்டவசமான நாள்” எனவும் தெரிவித்துள்ளார்.
கென்யாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு துக்க தினம் பிரகடனப்படுத்தக்கட்டுள்ளது.