பெருந்தோட்ட தொழிலாளர்களுக்களின் சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலுக்கு முதலாளிமார் சம்மேளனம் வருகைத்தராமையை கண்டித்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (19) இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல்
அறிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்களின் சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலில் முதலாளிமார் சம்மேளம் பங்கேற்காமைக்கு அவர் கண்டனமும் வெளியிட்டிருந்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பள உயர்வை வழங்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.