களுத்துறையில் 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடை , தேநீர்

களுத்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவருக்கு உளுந்து வடை மற்றும் தேநீர் கோப்பையை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகல்ல சுற்றுலா பொலிஸாரால் குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டவரிடமிருந்து உளுந்து வடையொன்றிற்கும் தேநீர் கோப்பையொன்றிற்கும் நியாயமற்ற முறையில் 800 ரூபா பணம் பெற்றுள்ளார்.

கடையில் பணிபுரிந்து வந்த 60 வயதுடைய முதியவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல நாட்களாக உணவகத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply