வெல்லிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிராலயம்

நியூசிலாந்தின் தலைநகர் வெல்லிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிராலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளுக்காக வெளிவிவகார அமைச்சின் குழுவொன்று நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த குழுவினர் அங்கு தங்கியிருப்பார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் வெல்லிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு அமைச்சரவை முன்னதாக அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply