பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி பூரண ஆதரவளிக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வினை கோரி நாளை(22.04) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் ஹட்டனில் நேற்று(20.04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு தேயிலை தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கிய போதிலும், பெருந்தோட்ட கம்பனிகள் சம்பளத்தை அதிகரிக்க மறுத்துள்ளனர்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலைக் காணிகளைப் பகிர்ந்தளித்து அவர்களை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.