இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் 5 புதிய உடன்படிக்கைகள் நேற்று(24.04) கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை தேசிய நூலகம், ஈரான் தேசிய நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் ஆகியவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் ஈரானின் கலாசார இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சுக்கு இடையே திரைப்படத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவ்வாறு இரு நாடுகளுக்கிடையிலும் ஊடகம் மற்றும் சுற்றுலாத்துறைகளுக்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.