உலக உணவு திட்டத்தின் ஊடாகவே சிறுவர்களின் பாவனைக்கு உகந்ததல்ல எனக் கூறப்படும் அரிசித் தொகை வழங்கப்பட்டதாகவும், அரசாங்கம் குறித்த அரிசித் தொகையினை விநியோகிக்கவில்லை எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு அரிசி வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் விதமாக உலக உணவு திட்டத்தினால் மேலதிக அரிசி தொகை வழங்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று(25.04) உரையாற்றும் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் நிதியினால் விநியோகிக்கப்படும் அரிசித் தொகை மாணவர்களின் பாவனைக்கு உகந்தது என அரசாங்கம் உறுதி செய்துள்தாகவும், மாகாண கல்வி நிலையங்களுக்கு அரிசி தொகை வழங்கப்பட்டதன் பின்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக, மாகாண பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் அரிசியின் தரம் உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் நிதியில் வழங்கப்படும் அரிசித் தொகையையும், உலக உணவு திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் அரிசித் தொகையும் வெவ்வேறாக பேணுமாறும் கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.