ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 23,005 பேரை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியியற் கல்லூரி பயிற்சிகளை நிறைவு செய்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேறவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.