பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுடன் அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அனுமதிக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தீர்மானத்தில் நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் ஏனைய வசதிகளை பெறுவதற்காக அமெரிக்க ஆய்வுக் கப்பல் நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி கோரியுள்ளது.
குறித்த அமெரிக்க கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி கோரிய போதிலும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது