இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் இன்று(29.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் 35 ஓட்டங்களையும், அணித் தலைவர் ரிஷப் பாண்ட் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுக்களையும், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
154 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
கொல்கத்தா அணி சார்பில் பில் சால்ட் 68 ஓட்டங்களையும், அணி தலைவர் சிரேயாஸ் ஐயர் 33 ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும் உள்ளது.