மகளிர் பாடசாலை விடுதியில் தீ விபத்து..!

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் விடுதி அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இன்று(29.04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாத்தறை தீயணைப்பு பிரிவினர், வெலிகம பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயணைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த பாடசாலையில் கடந்த மாதம் 3ம் திகதியும் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை  சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply