சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (02) மற்றும் நாளை
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தீர்மானித்துள்ளது.
சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பில் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நாடு தழுவிய சேவைகள் மற்றும் இணையான திணைக்கள சேவைகளை சேர்ந்த சுமார் 18,000 நிறைவேற்று அதிகாரிகளை பாதித்துள்ள தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாகவும், கூட்டங்களை புறக்கணித்துள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.