ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடர் ஜோர்ஜியாவின் தலைநகரான Tbilisi நகரில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜோர்ஜியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஆசிய அபிருத்தி வங்கியின் உறுப்பினரான இலங்கை, அதன் நிதியுதவி மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பல்வேறு ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன், இவ்வருட மாநாடு ஏனைய உறுப்பு நாடுகளுடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான களமாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply