ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் அமைச்சர்? 

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில்  இணைந்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தலவாக்கலை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின பேரணியில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் கலந்துகொண்டிருந்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் அழைப்பிற்கமைய, தான் இந்த பேரணியில் கலந்து கொண்டதாகவும், எனினும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணையவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply