கிளிநொச்சி சுண்டிக்குளம் – சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட
குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை முகாமிற்கு அருகில் கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது
சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் சுண்டிக்குளம் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டதையடுத்து
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.