இந்தியாவில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (07) நடைபெறுகின்றது.

மாநிலத்தின் 26 தொகுதிகளில்ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.

வாக்குப்பதிவுகளுக்காக பாடசாலைகளில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாஜக மிக வலிமையாக உள்ள மாநிலங்களில் குஜராத்துக்கே முதலிடம் என கூறலாம். 1989 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 09 மக்களவை தேர்தல்களிலும் பாஜகவே அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதி 96 தொகுதிகளிலும் அதனைத் தொடர்ந்து 20
ஆம் திகதியன்று 49 தொகுதிகளிலும் 25 ஆம் திகதியன்று 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் ஜூன் மாதம் முதலாம் திகதியன்று 57 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுகள்
இடம்பெறவுள்ளது.

Social Share

Leave a Reply