இந்த வருடத்தில் 170 இற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 178 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த மீனவர்களின் 23 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 264 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 35 படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply