இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால், அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாம்: வனிந்து ஹசரங்க (அணித் தலைவர்), சரித் அசலன்க (உப தலைவர்), குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்தியூஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, தீக்ஷன, துனித் வெல்லலகே, துஷ்மன்த சமிர, நுவான் துஷார, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க
15 பேர் கொண்ட இலங்கை குழாமிற்கு மேலதிகமாக 4 ரிசர்வ் வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த் வியாஸ்காந்த், அசித்த பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
