O/L பரீட்சை முறைகேடு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு  

தற்பொழுது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று(10.05) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று(10.05) இடம்பெற்ற ஆங்கில மொழி பரீட்சையின் போது, பரீட்சாத்திகள் சிலர் ஆங்கில மொழி வினாத்தாளை கையடக்கத் தொலைபேசிகளினுடாக புகைப்படம் எடுத்து, அதனை மற்றவர்களுக்கு அனுப்பி விடைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  

முறைகேடு இடம்பெற்ற பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply