பிரிந்து செல்ல தயார் நிலையில் மொட்டுக் கட்சி 

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் கட்சியின் அலுவலகத்தை இன்று(10.05) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பசில் ராஜபக்‌ஷவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று(09.05) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

பசில் ராஜபக்‌ஷவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற 6ஆவது சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. 

Social Share

Leave a Reply