போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற இருவரும் அவர்களுக்கு உதவி புரிந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள் எமிரேட்ஸ் விமானச் சேவையின் ஊடாக கனடா செல்லவிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு,வவுனியாவை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 மற்றும் 37 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.