முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த 15வது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய கம்பர்மலை
வன்னிச்சி அம்மன் கோவிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலர் வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர்.
முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரம் மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதி சந்தியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை,வவுனியாவில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.