புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 02 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை சட்டரீதியான வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் புலம்பெயர் தொழிலாளர்கள், சுமார் 543 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இது 11.4 சதவீதம் உயர்வாகும்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்ட தொகை 19.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.