அரச நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஊழலைக் குறைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், தங்கள் வட்டி விகிதத்தை குறைக்க ஒப்புக்கொண்டு அதனை நிறைவேற்ற ஊழல் மற்றும் வீண்விரயத்தை ஒழிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விரைவான பொறிமுறையை உருவாக்க சர்வதேச பிணைமுறி பத்திரதாரர்கள் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். திறம்பட்ட அரச நிர்வாகம் அமையுமாயின் கடன் வட்டி விகிதத்தில் ஒரு பகுதியை நீக்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச நிர்வாகத்தை திறம்பட கொண்டு நடத்தவும், ஊழலைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளீர்களா அல்லது இல்லையா? என்பதை அறிய விரும்புகிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிக நன்மைகளைப் பெறுவதற்காக தள்ளுபடியுடன் கூடிய பிணை முறி பத்திர பங்குகளை அதிகரிக்க, பிணை முறி பத்திரங்கள் மீதான மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறதா? என பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் இன்று(13) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுவதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றது. அரச வருவாயை அதிகரிப்பதும், அரச செலவினங்களில் நிதி சீர்மையைப் பேணுவதும் மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முப்படைகளில் பணிபுரியும் தரப்பினர், அவர்களுக்கு சீருடை, உணவு, மற்றும் கொடுப்பனவுகளுக்கு முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, வருடத்திற்கு ஒருவருக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
2023ம் ஆண்டில், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி திட்டங்களின் கீழ் பயன்பெற்ற குடும்பங்கள் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை, 2024 இல் ஒதுக்கப்பட்டுள்ள தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒதுக்கப்பட்ட தொகையின் அளவு குறித்தும் இங்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், ஏப்ரல் 2022 முதல் தொடங்கும் நிதியாண்டில் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டமை காரணமாக பி.978 ரூபா இழப்பு ஏற்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு அரச வருமானத்தில் இது எவ்வளவு தொகை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
தேசிய பாதுகாப்புக்கும், பாதுகாப்பு படையினரிக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக இதைப் பொருள் கொள்ளக் கூடாது. அரச ஒதுக்கீட்டில் பின்பற்ற வேண்டிய செயல்முறை மற்றும் தரவுகளை சமர்ப்பிக்குமாறே கோருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.