ஜனாதிபதி‌யிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை -மொட்டுக்கட்சி

ஜனாதிபதி‌ ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்றுள்ள ஏழாவது கலந்துரையாடல் இதுவாகும்.

இந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் அபிவிருத்தி தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply