சடுதியாக உயர்வடைந்த எலுமிச்சையின் விலை..!

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இடைத்தரகர்களின் மோசடி செயற்பாடுகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சந்தையில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 2,200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் எலுமிச்சை 50 ரூபா முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தமது உற்பத்திகளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என எலுமிச்சை உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply