நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு எதிரான கொலை மிரட்டல் தொடர்பில்
கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) பிற்பகல் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு
கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எதிர்வரும் தேர்தலுக்கு முன்வர அனுமதிக்கப் போவதில்லை எனவும்,
அச்சுறுத்தலை புறக்கணித்தால் கொலை செய்துவிடுவேன் எனவும் தொலைபேசியில் நபரொருவர் அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையிர் இராஜாங்க அமைச்சரின் முறைப்பாட்டிற்கமைய
கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.