விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முதன்முறையாக டென்மார்க்கில் வீர வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
பிரபாகரனின் அண்ணன் மனோகரன் இந்திய ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர்
“2009 ஆம் அண்டு மே 18 ஆம் திகதி இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் நீத்ததாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது.
பிரபாகரன் பெயரில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை
தடுக்கும் நோக்கில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை”
என மனோகரன் கூறியுள்ளார்.