மன்னாரை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ‘தமிழினப் படுகொலைக்குச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை வேண்டும்’, தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனியானது இன்று(16.05) பகல் 12.30 அளவில் மன்னார் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததாக மன்னார் செய்தியாளர் தெரிவித்தார். 

பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மே 18 முள்ளிவாய்க்கால் ஊர்தியை நோக்கி வந்த பெருமளவிலான மக்கள் முள்ளிவாய்க்காலில், உயிரிழந்த தம் உறவுகளை நினைவு கூறும் முகமாக, மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். 

இதனையடுத்து முள்ளிவாய்க்கால் ஊர்திப்பவனியானது மன்னார் முருங்கன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. அங்கிருந்து வவுனியா செல்லவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

– மன்னார் செய்தியாளர் – 

Social Share

Leave a Reply