நாடாளுமன்றம் எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
அன்றைய தினம் பொருளாதார மாற்றம் மற்றும் பொது நிதி முகாமைத்துவம் சட்டமூலங்கள்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.