ஜனாதிபதி இந்தோனேசியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பெயரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply