Elon Musk – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் சந்திப்பு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Muskக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விற்காக இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு  Elon Muskகை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்போது, இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்படுத்துவது குறித்து கலந்தலோசிக்கப்பட்டுள்ளது.

Starlink செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. 

Starlink என்பது தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணைய வசதிகளை வழங்குவதற்காக தனியார் விண்வெளிப் பயண நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் வலயமைப்பாகும். 

Social Share

Leave a Reply