இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஒருவர் எதிர்வரும் 20-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்று வெளிநாட்டிற்கு குடிப்பெயரவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டுள்ள சகலத்துறை ஆட்டக்கரரான குறித்த கிரிக்கெட் வீரர், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு குடிப்பெயரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த வீரர் குடிபெயரும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சில வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.