இலங்கையின் பணவீக்க வீதம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் 0.9% ஆகக் குறைவடைந்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, (CCPI) இந்த ஆண்டு மே மாதம் பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்க வீதம் 1.5% ஆக பதிவானது.
இதேவேளை,ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 0.0% ஆகக் குறைவடைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 0.9 % ஆக பதிவான உணவு அல்லாத பணவீக்கம் மே மாதத்தில் 1.3% அதிகரித்துள்ளது.