மின் கட்டணத்தை குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இலங்கை மின்சாரச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று (05. 06) தெரிவித்தார்
இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஜூலை முதலாம் திகதி முதல், 0-30 இற்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாவிலிருந்து 09 ரூபாவாகவும் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், 60-90 இற்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபாவிலிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுக்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் குறைக்கப்படும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.