டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், பார்படோஸில் இன்று(06.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலியா அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 67 ஓட்டங்களையும், டேவிட் வார்னர் 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஓமான் அணி சார்பில் பந்து வீச்சில் மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
165 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. ஓமான் அணி சார்பில் அயன் கான் 36 ஓட்டங்களையும், மெஹ்ரான் கான் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 39 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலியா அணியின் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, உலகக் கிண்ணத் தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் உகாண்டா அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், கயானாவில் இன்று(06.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உகாண்டா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
78 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. உகாண்டா அணி சார்பில் ரைசத் அலி ஷா 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இதன்படி, இந்த போட்டியில் உகாண்டா அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், டி20 உலகக்கிண்ண வரலாற்றில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக அணியின் உகாண்டா ரைசத் அலி ஷா தெரிவு செய்யப்பட்டார்.