கோதுமை மா விலை கூடாது

கோதுமை மாவின் விலையினை அதிகரிக்கமாட்டோம் என கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளன. அரசுக்கும், கோதுமை மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குமிடையிலான நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அண்மையில் மா நிறுவனம் ஒன்று அரசின் அனுமதியின்றி ஒரு கிலோ மாவிற்க்கான விலையினை 12 ரூபாவினால் அதிகரித்திருந்தது. அதனையடுத்தே இந்தக் கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

கோதுமை மா விலை கூடாது

Social Share

Leave a Reply