தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும், திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அமரனுக்கு எதிர்வரும் 9ம் திகதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி விரும்பும் பெண்ணுடன் திருமணம் நடைபெறவிருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
பிரேம்ஜியின் திருமணம் தொடர்பில் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிகையை பொது வெளியில் பகிர்ந்து விட்டார். எப்படி கல்யாணப் பத்திரிகை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் ஊடகத் துறையை சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் ஊடகத் துறையை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன்.
எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில்
அனைவரையும் சந்திப்போம்” என திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.