மன்னாரில் தபாற் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறைப் போராட்டம்

மன்னார் தபாலக ஊழியர்கள் சுகயீன இன்றைய தினம் (13/06),வியாழக்கிழமை,விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்றைய தினம் மன்னார்,தபாலக ஊழியர்களால் மேற்படி சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தபால் துறையில் நிலவும் 5000 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்பத் தவறியமை,உரிய பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும்
போராட்டத்திற்கு அஞ்சல் அதிபர்கள் ஆதரவளிக்காத நிலையில் ஏனைய அஞ்சல் அலுவலக சேவைகள் மன்னார் மாவட்ட அஞ்சல் திணைக்களத்தில் வழமை இயங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply