இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் இந்தியாவில் இருந்து 12,144 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியாவில் இருந்து 3,475 பேரும், சீனாவில் இருந்து 3,095 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,272 பேரும் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.