நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆபாச காணொளி – சிக்கிய இளம் தம்பதி   

ஆபாச காணொளிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் மற்றும் ஆபாச காணொளிகளை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பாரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தகைய மோசடி தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு, பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டிருந்த குறித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வீட்டை வாடகைக்கு வாங்கியுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் போது, ஆபாச காணொளி மேசடியில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தம்பதியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு தம்பதியினரும் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Social Share

Leave a Reply