சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த ஜியாபாங்க் (23) என்ற பெண், லீ என்ற 80 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டார்.
நெருங்கிய நண்பர்களாகிய இருவருக்கும் காதல் மலர்ந்ததையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர்.
பெண்ணின் குடும்பத்தினர் காதலை ஏற்க மறுத்ததால் அவர் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.
சமீபத்தில் லீ-ஜியாபாங்க் ஜோடி நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த ஜோடியின் ரொமேண்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொண்டதுடன் லீயுடன் எதுவும் சாத்தியம் எனவும் கூறியுள்ளார்.
லீயின் முதிர்ச்சி, நிலைப்புத்தன்மை மற்றும் ஞானம் ஆகியவற்றால் அந்த பெண் ஈர்க்கப்பட்டுள்ளாராம்.