2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சான்றளிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024 வாக்காளர் பட்டியலில் உள்ள உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 வாக்காளர் பதிவு செயன்முறையை ஜூலை மாத இறுதிக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.