இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 19 வயதிற்குட்பட்ட இலங்கை அணிக்கு டினுர கலுபஹன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சாருஜன் சண்முகநாதன் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
18 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ள இலங்கை இளையோர் அணி, இன்று(21.06) காலை 10 மணியளவில் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
19 வயதிற்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் எதிர்வரும் 28ம் திகதியும், டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 8ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுப்பயணம் இலங்கை இளையோர் அணிக்கு, சிறந்த அணியுடன் மோதுவதற்கான வாய்ப்பாகவும் மாறுப்பட்ட நாடுகளில் விளையாடுவதற்கான வாய்ப்பாகவும் அமையும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை குழாம்: டினுர கலுபஹன, சாருஜன் சண்முகநாதன், சதீவ் சமரசிங்க, ஹிரான் ஜயசுந்தர, மஹித் பெரேரா, தினிரு அபேவிக்ரமசிங்க, கயன வீரசிங்க, திசர ஏக்கநாயக்க, புலிந்து பெரேரா, நாதன் களன்ட்ரா, செஷான் மாரசிங்க, துமிந்து செவ்மின, ஹிவின் கெனுல, கீதிக டி சில்வா, விஹாஸ் தெவ்மிக, மனுஜ சன்துக்க, யூரி கொத்திகோடா, பீரவின் மனிஷ
