யாழ். அணிக்கு சவாலான வெற்றி இலக்கு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் மூன்றாம் நாளான இன்று(03.07) ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

தம்புள்ளை சிக்சேர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக 9(11) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, குஷல் ஜனித் பெரேராவுடன் இணைந்த நுவனிது பெர்னாண்டோ ஜோடி இணைப்பாட்டமாக 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

நுவனிது பெர்னாண்டோ 40(35) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இறுதி வரை அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குஷல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் 102(52) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மார்க் சப்மன் ஆட்டமிழக்காமல் 33(23) ஓட்டங்களை பெற்றுக் கொள்ள தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 191 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா மாத்திரம் 4 ஓவர்களுக்கு 25 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஏனைய வீரர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றாததுடன் அதிகளவான ஓட்டங்களையும் வழங்கியிருந்தனர். 

இதன்படி, ஜப்னா கிங்ஸ் அணிக்கு 192 ஓட்டங்கள் எனும் சவாலான வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply