பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு 

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள போதும், பாண் மற்றும் பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

உணவு உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களின் விலை அதிகமாக காணப்படுவதினால் விலைகளில் மாற்றம் செய்ய இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

எரிவாயு விலையை குறைப்பதால் மாத்திரம் பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இயலாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply