லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் ஆறாம் நாளான இன்று இரண்டாவது போட்டி கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ், தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையில் தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி அபாரமான வெற்றி ஒன்றை பெற்று இந்த தொடரில் தமது இருப்பை தக்க வைத்துள்ளது. இது அவர்களின் முதல் வெற்றியாகும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
185 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய தம்புள்ளை சிக்சேர்ஸ் அணியின் ஆரம்பம் அபாரமாக அமைந்தது. ரீஷா ஹென்றிக்ஸ், குஷல் பெரேரா இணைந்து பெற்ற ஆரம்பம் கடினமான இலக்கை துரத்தக்கூடியதாக அமைந்தது. ஒனபதாவது ஓவரில் இருவரும் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். இந்த தொடரில் பெறப்பட்ட முதலாவது ஆரம்ப சத இணைப்பாட்டம் இதுவாகும். 154 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பூர்த்தி செய்த வேளையில் ரீஷா ஹென்றிக்ஸ் டஸ்கின் அஹமட்டின் பந்துவீச்சில் 54(39) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் குஷல் பெரேரா 80(50) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருவரும் ஆட்டமிழந்ததை தொடர்ந்து நிதானமாக துடுப்பாடி மார்க் சப்மன், இசுரு உதார ஆகியோர் போட்டியை நிறைவு செய்தனர்.
20 ஓவர்களில் 02 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணியின் பலமான பந்துவீச்சு இன்று கைகொடுக்காமல் போனது.
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணி சார்பாக ரஹ்மனுல்லா குரபாஷ், அஞ்சலோ பெரேரா ஜோடி சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். 73 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக பெற்ற வேளையில் அஞ்சலோ பெரேரா 41(27) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ரஹ்மனுல்லா குர்பாஷ் 36(28) ஓட்டங்களை பெற்ற வேளையில் டுஸான் ஹேமந்தவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதீர சமரவிக்ரம 04 ஓட்டங்களோடு மொஹமட் நபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறந்த ஆரம்பத்தை அடுத்தடுத்த விக்கெட்களை கைப்பற்றி கட்டுப்படுத்தியது தம்புள்ளை அணி. மொஹமட் நபி ஷதாப் கானின் விக்கெட்டை தகர்க்க கொழும்பு அணிக்கு மேலும் நெருக்கடி அதிகரித்தது. ஷதாப் கான் 04(8) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். திஸ்ஸர பெரேரா 07(5) ஓட்டங்களுடன் நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் துடுப்பாட வந்த சாமிக்க கருணாரட்ன அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையி உயர்த்தினார். கிளன் பிலிப்ஸ் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பாடி ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சாமிக்க ஆட்டமிழ்காமல் 27(12) ஓட்டங்களையும், பிலிப்ஸ் 56(32) ஓட்டங்களையும் பெற்றனர். இணைப்பாட்டமாக 59 ஓட்டங்களை இருவரும் பெற்றனர்.
20 ஓவர்கள் நிறைவில் கொழும்பு அணி 06 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களை பெற்றது.
தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் டுஸான் ஹேமந்த 3 ஓவர்களில் 22 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். மொஹமட் நபி 4 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார். நுவான் பிரதீப் ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி விக்கெட்களை கைப்பற்றினார்.
சகல அணிகளும் நான்கு போட்டிகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் யாழ் அணி முதலிடத்திலும், காலி அணி இரண்டாமிடத்திலும் தலா 6 புள்ளிகளோடு காணப்படுகின்றன. கொழும்பு அணி 4 புள்ளிகளோடு மூன்றாமிடத்திலும், தம்புள்ளை அணி 2 புள்ளிகளோடு நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளது. கண்டி அணி 2 புள்ளிகளோடு ஐந்தாமிடத்திற்கு பின் சென்றுள்ளது..
நாளைய தினம் போட்டிகள் எதுவுமில்லை. நாளை மறுதினம் மீண்டும் தம்புள்ளையில் போட்டிகள் ஆரம்பிக்கின்றன.
அணி விபரம்
தம்புள்ளை அணியில் தனுஷ்க குணதிலக, நுவான் துஷார ஆகியோர் நீக்கப்பட்டு லஹிரு உதார, நுவான் பிரதீப் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு அணியில் கருக்க சங்கீத் நீக்கப்பட்டு பினுர பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார்.
தம்புள்ள சிக்சேர்ஸ் – முஸ்டபைஸூர் ரஹ்மான், நுவனிது பெர்னாண்டோ, குஷல் ஜனித் பெரேரா, மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே, துஷான் ஹேமந்த, டில்ஷான் மதுசங்க , ரீஷா ஹென்றிக்ஸ்,லஹிரு உதார, நுவான் பிரதீப்
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, அஞ்சலோ பெரேரா, டஸ்கின் அஹமட்