ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்தல் குறித்த மனு இன்று பரீசீலனைக்கு

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (08.07) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வர்த்தகர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

இதனிடையே எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தேர்தல் திகதியை அறிவிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply