லங்கா பிரீமியர் லீக் தொடரில், தம்புள்ளை அணி சமூக அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஆதரவுடன் புதிய முயற்சியை கையாளவுள்ளது.
கொழும்பில், எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் தம்புள்ளை அணி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சுய மார்பக பரிசோதனைகளை ஊக்குவிப்பதற்கும் போட்டியின் போது இளஞ்சிவப்பு(Pink) நிற ரிப்பனுடன் கூடிய இளஞ்சிவப்பு(Pink) நிற ஜெர்சியை அணியவுள்ளதாக தம்புள்ளை அணி அறிவித்துள்ளது.
ஏனைய நாடுகளிலும் கிரிக்கெட் போட்டிகளின் போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட இத்தகைய முயற்சி, இலங்கையிலும் புற்றுநோய் விழிப்புணர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், நாட்டில் குழந்தை புற்றுநோய் தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, சுவ அரண(Suwa Arana) குழந்தை பராமரிப்பு நிலையத்திலிருந்து 30 குழந்தைகளை போட்டிக்கு அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுவ அரண(Suwa Arana), இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் திட்டமாகும்.