அடுத்த மாதம் வாகன இறக்குமதிக்கு அனுமதி? 

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டின் பண பரிவர்த்தனை நிலை மற்றும் மக்களின் தேவைகளின் முன்னுரிமைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய இயலும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

பொது போக்குவரத்து வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், மாற்று வாகனங்கள், பொது வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஆகிய ஒழுங்குமுறைகளின் கீழ் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறைக்கு 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இருப்பினும் இதுவரையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply